அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அமைச்சரவை அனுமதி
Douglas Devananda
Tamil nadu
Sri Lanka
India
By Kiruththikan
சரக்கு கப்பல் சேவை
காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்
இலங்கையர்களுக்கு இந்தச் சேவை மூலம் எரிபொருள், உரம், பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள உதவும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவை காங்கேசன்துறைக்கும் தமிழகத்திலுள்ள துறைமுகங்களான காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த துறைமுகங்களிடையே சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
