பிரான்ஸ் தேர்தலின் புதிய வரலாறு: கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
பிரான்ஸின் (France) ஐந்தாம் குடியரசில் முதன் முறையாக அதிதீவிர வலதுசாரிகள் முன்னணியில் இருக்கும் புதிய வரலாறு இன்று இடம்பெற்ற முதற்சுற்று வாக்களிப்பின் முடிவில் வெளியான கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் வகையில் றசம்பிள்மோ நசனல் எனப்படும் தேசிய பேரணி கட்சி 260 முதல் 310 ஆசனங்களை பெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேபோல இடதுசாரிகளின் புரொன்ட் பொப்பிலர் புறன்ட் எனப்படும் புதிய மக்கள் கூட்டணிக்கு 115 முதல் 145 இடங்கள் கிட்டும் எனவும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) கட்சிக்கு 90 முதல் 120 ஆசனங்கள் கிட்டும் எனவும் ஏனைய கடசிகளுக்கு 30 முதல் 50 ஆசனங்கள் கிட்டும் எள எதிர்வுகூறப்பட்டள்ளது.
மேக்ரனின் என்சாம்பிள் அணி
வாக்களிப்பு வீதத்திலும் தீவிர வலதுசாரிகளின் றசம்பிள்மோ நசனல் 33 சதவீத வாக்குளை பெற்று முன்னணியில் உள்ளது.
இடதுசாரிகளின் கூட்டணி 28 .50 வீதம் வாக்குகளையும் அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரனின் என்சாம்பிள் அணி 22 வீத வாக்குகளையும் பெற்று எதிர்வு கூறப்பட்டது போலவே மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது.
முடிவுகளில் அதிதீவிர வலதுசாரி முன்னணியல் இருப்பதால் ஆதரவாளர்களுக்கும் தீவிர இடதுசாரி ஆதரவாளர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்களை எதிர்பார்த்து காவற்துறையினர் தலைநகர் பாரிஸ் உட்பட்ட இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வாக்களிப்பு முடிவுகள்
இதற்கிடையே இன்று பாரிசில் உள்ள குடியரவு சதுக்கத்தில் ஒன்று கூடுமாறு இடது சாரிகளின் புதிய மக்கள் முன்னணி தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்ததால் இந்த ஒன்று கூடலின் முடிவில் விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
பிரான்ஸை பொறுத்தவரை அதன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மிக குறுகிய காலத்தில அதாவது மூன்று வாரங்களில் இடம்பெற்ற தேர்தலாக இந்த தேர்தல் பதிவாகியுள்ளது.
இன்றைய வாக்களிப்பு முடிவுகள் பிரான்சில் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி மற்றும் உள்நாட்டுக்குழப்பத்தையும் உருவாக்கும் என்ற எதிர்வுகூறலுடன் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு
நாளை காலை அதிகாரபூர்வமாக முதற்சுற்றின் முடிவுகள் வெளிப்படும் முன்னதாக இன்று இடம்பெற்ற வாக்களிப்பில் 1981 ஆண்டுக்குப்பின்னர் முதற்தடவையாக அதிக வாக்களிப்பு வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்போது, நாடளாவிய ரீதியில் 67 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |