கொழும்பை வந்தடைந்த பிரான்ஸ் கடற்படை கப்பல் - செய்திகளின் தொகுப்பு
Colombo
Sri Lanka
By pavan
கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படை கப்பல், ஒருவாரம் வரையில் இங்கு தரித்து நிற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை மரபுப்படி இந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
102 மீட்டர் நீளம் கொண்ட பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் 107 பேர் இலங்கை வந்துள்ளனர்.
இக்கப்பல் தீவில் தரித்திருக்கும் போது, அதில் வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படையினர் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளனர்.
பிரான்ஸ் கடற்படை கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
