சக நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த மூவர் கைது!
புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் பகுதியில் சக நண்பனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (05) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடையர்கட்டு வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாக்குவாதம் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தவேளை, சக நண்பர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை

இதனைத்தொடர்ந்து, ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்படுவதாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் கைதான இவர்களை நேற்றைய தினம் (06.02.2023) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.