அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் பதில் தாக்குதல்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் முடிவுக்கு வரும் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கும் வகையில், "ஏதாவது நல்ல முடிவு எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஈரான் மறுப்பு
இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போர் நிறுத்தத்திற்கு முன் செய்து கொண்டிருந்த தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

Image Credit: The American Prospect
இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று ஈரான் அரசு மறுத்துள்ளது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதால், ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு செய்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |