ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து ஏமன் இராணுவம் அதிரடி தாக்குதல்
ஏமனின் துபாப் (Dhubab) மற்றும் மோச்சா (Al Mocha) பகுதிகளில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து ஏமன் விமானப்படை அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அரசாங்க ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செங்கடல் கடலோரப் பகுதிகளில் ஹவுதி அமைப்பினர் தங்களின் பலத்தைப் பெருக்கவும், நடமாட்டத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டிருந்த வாகனப் பேரணிகள் மற்றும் இலக்குகளை ஏமன் போர் விமானங்கள் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளன.
பெரும் சேதங்கள்
இந்தத் தாக்குதலின் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

செங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டை பலப்படுத்தவும் இந்த இராணுவ நடவடிக்கை தொடரும் என ஏமன் இராணுவத் தரப்பு எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 16 மணி நேரம் முன்