தாக்குதலுக்குள்ளாகும் ரஷ்யாவின் எரிபொருள் உள்கட்டமைப்பு! ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் பலத்த அறிவுறுத்தல்
ரஷ்யாவின் டீசல் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு, தனது உக்ரேனிய சகா வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வருவாய் ஆதாரத்தையும், அதன் ராணுவப் பயன்பாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தையும் முடக்கும் நோக்கில், உக்ரைன் சமீபகாலமாக நீண்ட தூர ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் ரஷ்யாவின் முக்கிய எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
அயர்லாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம்
இதன் காரணமாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த எரிபொருள் சுத்திகரிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவிலும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அயர்லாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் இதுகுறித்துப் கருத்து வெளியிடுகையில்,
“ஜெலென்ஸ்கி உடனடியாக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். அவர் ரஷ்யாவில் உள்ள டீசல் எரிபொருள் ஆலைகளை முடக்குவதை நிறுத்த வேண்டும்.
அவர் பிற இராணுவ இலக்குகளைத் தாக்கட்டும், ஆனால் டீசல் எரிபொருளை அல்ல. ஏனெனில், உலகளவில் அவர் பெரும் டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறார்," என்று குறிப்பிட்டார்.
மேலும், உலகளாவிய இந்த எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு நாடுகள் காரணமல்ல என்றும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் இந்த மோதல்களால்தான் உலக சந்தையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 12 மணி நேரம் முன்