வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி பலாலியில் 13ஆவது வாரமாக போராட்டம்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இன்றைய தினம் 13ஆவது வாரமாக குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 5 மணி நேரம் முன்