யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lanka Tamil
By Theepachelvan Jun 27, 2024 10:39 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

அரசியலின் தவறுகள் மோசமான வரலாறுகளை எழுதிவிடுகிறது. ஆனால் வரலாற்றில் இருந்து தான் இன்னும் பாடங்களை உலகம் கற்காமல் இருக்கிறது.அப்படிக் கற்றிருந்தால் உலகில் மிகவும் கசப்பான அனுபவமாக கருதப்படுகின்ற இனப்படுகொலைகள் திரும்பத் திரும்ப நிகழ்ந்தபடி இருக்காது.

இந்த நவீன உலகத்திலும் தொடர்பாடல் வளர்ச்சி பெற்ற யுகத்திலும் இனப்படுகொலை எல்லாம் நடக்கிறதா? என்று யாரேனும் கேட்கக்கூடும்.

நவீன ஊடகங்களின் ஆரம்ப யுகத்தில் தான் இந்த நூற்றாண்டின் ஈழ மண்ணில் மாபெரும் இனப்படுகொலை ஒன்று தெளிவாகத் தெரியும் படியாகவே நிகழ்த்தப்பட்டது.

அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…

அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…

இனவழிப்பு செய்யப்பட்ட யூதர்கள்

ஜனவரி 27ஆம் திகதி பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள். இப்பெரும் இன அழிப்பினால் நாட்சிப் படைகளினாலும் அதன் கூட்டாளிகளினாலும் 6 மில்லியன் யூதர்கள், 2 மில்லியன் நாடோடி இன மக்கள் (உரோமா மற்றும் சின்டி), 15,000 மாற்றுப் பாலுறவுக்காரர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏனையவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாகவே இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த பொதுசபைக் கூட்டத்தில் இந்த நாளை நினைவுகூரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் | From Jews To Elamites International Genocide Day

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 60/7ஆம் இலக்கத் தீர்மானமானது, நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் விடுதலை மற்றும் பெரும் இன அழிப்பு நிறுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக (24.01 2005 ) அன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைகளின் சிறப்பு அமர்வின்போது நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் அனுபவங்களின் அடிப்படையில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் அமைந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் மேற்குறித்த தீர்மானம் 2005 இல் இயற்றப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஈழத்தில் மிகப் பெரும் இனவழிப்பு துவங்கப்பட்டது.

இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….

இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….

ஈழத்தில் இனவழிப்பு

ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக ஈழத் தமிழ் மக்கள் போராடத் துவங்கினர்.ஆரம்பத்தில் ஜனநாயக வழியில் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்தனர்.

பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் இரண்டாக இருந்த இலங்கைத் தீவில் ஒன்றுபட்ட இலங்கைக்காக பிரித்தானியர்களுக்கு எதிராக போராடிய தமிழ் மக்களுக்கு சுதந்திர இலங்கை அடிமை சாசனத்தையும் அடிமை வரலாற்றையும் பரிசளித்தது.

யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் | From Jews To Elamites International Genocide Day

1956இல் உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள சட்டமும் அத்துடன் துவங்கப்பட்ட இனப்படுகொலைகளும் ஈழத் தமிழர்களுக்கு தனித் தேசம் ஒன்றே பாதுகாப்பான வழியென பிரிந்து செல்லும் பாதையை வலியுறுத்துகிறது என்பதை தமிழ் தலைவர்களைக் காட்டிலும் சிங்களத் தலைவர்களே எடுத்துரைத்தனர்.

இந்த விதத்தில் சிங்கள முற்போக்குத் தலைவர்கள் தீர்க்க தரிசனமாக எடுத்துரைத்தனர். பின் வந்த காலத்தில் ஈழத் தமிழ் இளைஞர்கள் தனி நாடு கோரி ஆயுதம் தரித்த போராட்டத்தை துவங்கினர்.

சிங்களப் பேரினவாதத்திடம் இருந்தும் சிங்களப் பேரினவாதம் உருவாக்கிய அரசியலமைப்பு மற்றும் அதன் வழி இயங்கிய அரச எந்திரமான இராணுவம் மற்றும் காவல்துறையின் ஒடுக்கமுறைக்கு எதிராக தமிழர்கள் ஆயுதம் திரப்பதுவே ஒரே வழியென தமிழ் இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.

கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…

கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…

தலை நிமிர்ந்த தமிழர் தேசம்

சிங்கள தேசத்திற்கு நிகராக தமிழ் தேசத்தை கட்டி எழுப்பி பொருளாதாரம், கல்வி, நிர்வாகம், மருத்துவம், நிதி என அனைத்துத் துறைகளிலும் இலங்கையில் முன்னுதாரணமான தேசம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்த்தியுடன் படைத்தார்.

அந்த வகையில் இன ஒடுக்குமுறைக்கும் இன மேலாதிக்கத்திற்கும் எதிராக 2009.இற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழீழத் தேசம், சிங்கள தேசத்திற்கும் இந்த உலகில் உள்ள நாடுகளுக்கும் முன்னூதாரணமானதாக அமைந்தது.

யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் | From Jews To Elamites International Genocide Day

எந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அதே இனவழிப்பை, இன ஒடுக்குமுறையை ஆயதமாக கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழீழ தேசம் மீதும் அங்கு வாழ்ந்த தமிழர்கள்மீதும் இனவழிப்புப் போரை சிங்கள அரசு நடாத்தியது.

இதனால் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இறுதிப் போர் காலத்தை அண்டிய போரில் மாத்திரம் இல்லாமல் செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் மண் தமிழ் இனத்தின் குருதியால் நனைந்து ஊறியது.

இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு

இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை

பாதுகாப்பு வலயங்களை அறிவித்து அங்கு தஞ்சம் புகுந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை, உணவு, மருந்து முதலியவற்றை தடை செய்து மக்களை கொன்றமை, சுவாசிக்கும் காற்றில் விசம் கலந்து குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொன்றமை என உலகில் பெரும் இன அழிப்பில் நாசிப்படைகளும் அதன் கூட்டுப் படைகளும் செய்த அத்தனை இனவழிப்பு முறைகளையும் இலங்கை அரசும் பயன்படுத்தியது.

யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் | From Jews To Elamites International Genocide Day

இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பதே இனவழிப்பு என்ற வரைவிலக்கணத்திற்கு அச்சுப் பிசகாமல் நிகழ்த்தப்பட்டது.ஈழ இனப்படுகொலை.

1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ.நா சட்ட விதி 2 இன் படி அறிவித்தது.

இந்த கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் கொண்டு வரப்பட்டது. இந்தநீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஈழ இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதுடன் உலகில் இன்னமும் இன அழிப்புக்கான கதவுகள் திறந்தே விடப்படுகின்றன.

ஒரு தேசிய இனத்திற்கு காணி அதிகாரம் இல்லை என்றால்...

ஒரு தேசிய இனத்திற்கு காணி அதிகாரம் இல்லை என்றால்...

சர்வதேச சமூகம்

நவீன யுகத்தில் கத்தியின்றி இரத்தமின்றி இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் முன்னாள் போராளிகள் மீதான முள்ளிவாய்க்கால் இனப்போர் இன்னும் முடியவில்லை.

ஈழத்தில் மக்கள் உணர முடியாத வகையில் இல்லாமல் செய்யப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காய் அவர்களின் உறவுகள் தேடித் தேடியே தம்மை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் | From Jews To Elamites International Genocide Day

2009 இனப்படுகொலைக்கு நீதியை வழங்காமையும் அது தொடர்பில் மௌனம் சாதிக்கின்றமையும் அதற்காக சர்வதேச சமூகம் வெளிப்படுத்தும் கண்டுகொள்ளாமையும் ஈழத்தில் இன்னுமின்னும் இனவழிப்பை ஊக்குவிக்கிறது.

இப்படி இருக்கையில் ஜனவரி 27 பன்னாட்டு இன அழிப்பு நினைவுநாள் அதன் அர்த்தத்தை இழந்து உலகமெங்கும் இனவழிப்புக் கதவுகளையே திறக்கிறது.

தலைவர் பிரபாகரனிடம் ராஜீவ்காந்தி சொன்ன இரகசியம் ..!

தலைவர் பிரபாகரனிடம் ராஜீவ்காந்தி சொன்ன இரகசியம் ..!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 27 June, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

Stütze, Germany, Kingsbury, United Kingdom, Wigan, United Kingdom

14 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், கோண்டாவில், வெள்ளவத்தை

24 Jun, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, கோண்டாவில் மேற்கு

24 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், திருநெல்வேலி

30 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Moudon, Switzerland

28 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்

Penang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jun, 2024
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

19 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொடிகாமம், வெள்ளவத்தை

24 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், பாண்டியன்குளம்

08 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Scarborough, Canada

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், வட்டக்கச்சி, Saint, France

27 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

23 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Mount Claremont, Australia

26 Jun, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, Toronto, Canada

25 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Aldenhoven, Germany

23 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சங்கானை, யாழ்ப்பாணம்

24 Jun, 2014
மரண அறிவித்தல்

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை தெற்கு, காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, Mississauga, Canada, Brampton, Canada

27 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022