பலஸ்தீனர்கள் ஏந்திய ஆயுதம்.. கதிகலங்கும் மேற்குலகம் (காணொளி)
ஹமாஸ் மேற்கொண்டு வருகின்ற தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவிடம் இருப்பதாக கூறப்படுகின்ற ஒரு லட்சத்திற்கும் அதிகமான சக்தி வாய்ந்த ஏவுகணைகள் யெமனின் ஹீத்தி அமைப்பினர் ஏவி வருகின்ற பலஸ்டிக் ஏவுகணைகள் இவை அனைத்தையும் விட பலஸ்தீனர்கள் உபயோகித்து வருகின்ற முக்கியமான ஒரு ஆயுதமே இஸ்ரேலுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
இஸ்ரேலுக்கு மாத்திரமல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் கூட பல விதமான கலக்கத்தை அந்த குறிப்பிட்ட ஆயுதம் ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேலையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்ப்பட்டு வருகின்ற பல மேற்குலக நாடுகளையும் கலங்கடித்துக் கொண்டிருக்கின்ற அந்த ஆயுதம் வெடித்து சிதருகின்ற ஒரு குண்டு அல்ல மாறாக அது ஒரு சக்தி வாய்ந்த வாக்கியம் இரு கோஷம்.
“from the river to the sea” அது தான் அந்த வாக்கியம். அதாவது அந்த ஆற்றில் இருந்து கடல் வரை.
இன்று உலகை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் போன்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் “from the river to the sea” என்ற வாக்கியம் பலஸ்தீனர்கள் மற்றும் பலஸ்தீன ஆதரவாளர்கள் மேற்கொண்டுவருகின்ற பல்வேறு ஆர்ப்பாட்ட ஊர்வளங்களில் ஒரு மாபெரும் கோஷமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு, “from the river to the sea” என்கின்ற இந்த வாக்கியம் மிகப் பெரிய தாக்கத்தையும் கோபத்தையும் இஸ்ரேலுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவான மேற்குலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி வருகின்றது.
இது குறித்து விரிவான மற்றும் சுவாரசியமான விடயங்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி