சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சடுதியாக உறைந்துபோன நூடில்ஸ்
United States of America
Food
By Vasanth
அமெரிக்காவில் நிலவும் கடுங்குளிரால் சாப்பிட்டுக்கொண்டிருக்குபோது நூடில்ஸ் திடீரென உறைந்து போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் உறைய வைக்கும் அளவிற்கு கடுங்குளிர் நிலவிவருகிறது.
இந்நிலையில் வடக்கு டகோட்டாவில் கடந்த நில நாட்களாகவே மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. திறந்த வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், தனது கையிலிருந்த கப்பலில் இருந்து நூடில்ஸை சாப்பிடுவதற்காக வாய்க்கு அருகில் கொண்டுவருகிறார்.
ஆனால் அதற்கு நூடில்ஸ் உறைந்துவிடுகிறது.