விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் றீ(ச்)ஷாவின் புதிய முயற்சி
றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் அடுத்த முயற்சியாக 'பழமுதிர்சோலை' என்ற பழ மரம் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை தீவிலுள்ள அனைத்து பழங்களும் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கதில் இந்த 'பழமுதிர்சோலை' உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்கச்சி மண் விவசாயத்துக்கு பொறுத்தமான மண் இல்லை என்றாலும் இளம் விவசாயிகளின் புரட்சிகரமான விவசாய நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு பயிர்கள் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பயிரிடப்படுகின்றன.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விடுதிகள், விளையாட்டு திடல்கள் மற்றும் கண்கவர் இடங்கள் அமைந்துள்ளதோடு தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியங்களும் மாறாத வகையில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில் றீ(ச்)ஷாவில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பழமுதிர்சோலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |