எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் கஞ்சன வெளியிட்ட தகவல்!

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Pavan Sep 06, 2022 10:11 AM GMT
Report

நாட்டில் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதியை பாதிக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாகவே இந்த ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "அந்நிய செலாவணி நெருக்கடி ஓரளவு தணிக்கப்பட்டவுடன் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது இலங்கையின் நாளாந்த எரிபொருள் நுகர்வு 3000 லீட்டர்கள் என தரவு பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் கஞ்சன வெளியிட்ட தகவல்! | Fuel Allocation Qr Fuel Distribution Crisis Import

இதில் 10% லங்கா ஐஓசி நிறுவனத்தினாலும், மீதமுள்ள 90% இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தாலும் (CPC) வழங்கப்படுகிறது தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக இதுவரை 6.2 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 1.1 மில்லியன் முச்சக்கர வண்டிகள், 3.6 மில்லியன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1.5 மில்லியன் மற்ற வாகனங்கள் ஆகும்.

எரிசக்தி அமைச்சு தற்போது பொது போக்குவரத்தை சீராக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது, இதன் மூலம் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது.

ஒவ்வொரு வகை வாகனங்களின் தினசரி உபயோகத்தையும் கண்காணித்து கண்டறிந்து, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வரையறுக்கப்பட்ட எரிபொருள் தற்போது வழங்கப்படுகிறது" என்றார்.

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் வழங்கும் முறை

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் கஞ்சன வெளியிட்ட தகவல்! | Fuel Allocation Qr Fuel Distribution Crisis Import

அதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் வழங்கும் முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் கஞ்சன, போக்குவரத்து அமைச்சரின் பங்குபற்றுதலுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், முச்சக்கர வண்டி சங்கங்கள் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மாத்திரமே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

முச்சக்கர வண்டிகளுக்கு தனித்தனியாக எரிபொருளை வழங்குவதற்கு குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படவில்லை என அமைச்சர் கஞ்சன மேலும் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகள் வழமையான நடைமுறையாக நாட்டிலுள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் தமக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016