எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியாகிய அறிவிப்பு
கியூ.ஆர் குறியீடு
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் கியூ.ஆர் குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் கியூ.ஆர் குறியீட்டையை வேறு யாரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட கியூ.ஆர் முறையில் பிரச்சினைகள் காணப்படுமாக இருந்தால், மீள பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
