எரிபொருள் நெருக்கடி - 26 தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Vanan
எரிபொருள் நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடருந்து ஊழியர்கள் பணிக்குச் செல்ல முடியாமையினால் 26 தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று பணிக்குச்செல்ல முடியாத காரணத்தினால் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கொழும்பிலிருந்து ஏனைய நகரங்களுக்கு செல்லும் தொடருந்து சேவைகளே நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்
இதில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைகளுக்கு இடையில் புறப்படவிருந்த அதிவேக தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தொடருந்து ஊழியர்களுக்கான எரிபொருள் பற்றாக்குறையினால் தொடருந்து சேவைகளில் பாதிப்பு அல்லது தாமதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

