எரிபொருள் நெருக்கடி : வங்கிகள் இயங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு!
நாட்டிலுள்ள வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை அத்தியாவசிய சேவையாகத் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு, வங்கிச் சேவைகளில் சில தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்காலிக எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், புதன்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரமே வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வங்கிச் சேவை
ஏனைய நாட்களில் வழமையான நேர அட்டவணையின்படி காலை 08.30 முதல் மாலை 03.00 வரை சேவைகள் முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துமாறும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வங்கி கிளைகளுக்குச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |