எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Sathangani Apr 21, 2026 10:56 AM GMT
Report

உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

உலக எரிபொருள் போக்குவரத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலக வரலாற்றில் மிக மோசமான எரிசக்தி நெருக்கடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலக வரலாற்றில் மிக மோசமான எரிசக்தி நெருக்கடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி

இது குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில், "உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

எனவே, தற்போதைய QR குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும்.

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு | Fuel Crisis In Sri Lanka Qr System For Fuel Supply

மேலும், எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்துப் பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

சாத்தியமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016