இன்று முதல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு! வெளியானது அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என தொழிற்சங்க பிரதிநிதி ஆனந்த பாலித கூறியுள்ளார்.
இன்று முதல் பாரிய மக்கள் வரிசை
எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், இன்று முதல் பாரிய மக்கள் வரிசை காணப்படும் என்றும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
95 வீதமான மக்கள் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்யத் தவறினால் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.
