இலங்கையை மேலும் உலுக்கவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு
நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் கப்பல்களிடம் இருந்து தரகு பணம் பெறும் நடவடிக்கை காரணமாக நாட்டுக்குள் பாரதூரமான எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் எந்த எரிபொருள் கொள்கலன் வண்டிகளும் எரிபொருளை விநியோகிக்க செல்லாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் குறைந்தளவிலேயே கொள்கலன் வண்டிகள் இருக்கின்றன. இதன் காரணமாக தனியாரின் உதவியுடன் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பு இணையாக போக்குவரத்து விலைகளை அதிகரிக்காமைக்கு எதிராக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தனியார் கொள்கலன் வண்டிகளின் உரிமையாளர்களின் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்