தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்! எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கஞ்சன விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்றைய தினம் (13) இடம்பெற்றதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR அமைப்புடன் வழங்கப்படும் எரிபொருளின் அளவு பற்றிய தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
எரிபொருள் விநியோகம்
அதேவேளை, அத்தியாவசிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, மீன்பிடித் துறை, விவசாயத் தேவைகள், தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
1) Progress review meeting was held this morning @ CPSTL Kollonnawa Terminal on Fuel Distribution. Data was analyzed & discussed on quantity of fuel distributed to each fuel station & quantity of fuel dispensed with QR system. pic.twitter.com/UZUoeKTcsZ
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 13, 2022
மேலும், சரியான வழிமுறைகளை கடைபிடிக்காத எரிபொருள் நிலையங்கள் குறித்து தகுந்த நிர்வாக முடிவுகளை எடுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
