விசேட எரிபொருள் வழங்கலை இரத்து செய்ய தீர்மானம்! அமைச்சு அறிவிப்பு
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக பொதுமக்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாளை இரத்து செய்ய சுகாதார அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோகிக்கும் திகதி தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டம்
சுகாதார ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்க சுகாதார அமைச்சு புதிய திட்டத்தை அரமித்திருந்தது.
இருப்பினும், சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுகின்றமையால் பொது மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
