காரைதீவில் ஒரே குழியில் கொன்று புதைக்கப்பட்ட ஐவர்! பின்னணியில் கருணா - பிள்ளையானின் முக்கியஸ்தர்
கருணா மற்றும் பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான கே.புஷ்பகுமார், என அழைக்கப்படும் இனியபாரதியின் கைது தமிழர் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
அப்போதைய சிறிலங்கா அரசாங்கத்திற்கு கருணா மற்றும் பிள்ளையானை தாண்டி தமிழர் தாயகத்திற்கான தமிழீழ யுத்தத்திற்கு பின்னர், கையாளாக இனியபாரதி செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதன்படி இன்று(06.07.2025) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) இனியபாரதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
மேலும், இவர் மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு கொலை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டதக்க ஒன்று.
இந்நிலையில் இந்த கைதின் மூலம் காரைத்தீவில் இடம்பெற்ற ஐவர் படுகொலையின் பின்னணியும் அம்பலமாகலாம் என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிகாட்டுகின்றர்.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொலை செய்யப்பட்டு, வீடொன்றின் கீழ் தளத்தில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான பல சர்ச்சைகளை கிளப்பியுள்ள இனியபாரதியன் கைது இலங்கையின் முன்னாள் அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு சவாலாக போகின்றது என்பதையும், அதில் உள்ள அறியப்படாத விடயங்களையும் தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...
