இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான முறையை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இதன்படி, இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள உரிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பல வாகனங்களைக் கொண்ட நிறுவனங்களும் QR முறைமையில் எரிபொருள் பெற முடியும்
இதேவேளை, பல வாகனங்களை கொண்ட வணிகங்கள் தங்களது வாகனங்களை வர்த்தக பதிவு எண்ணின் ஊடாக எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமைக்கு (QR முறைமை) பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update on Fuel Pass -
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 28, 2022
Businesses with multiple vehicles can now register all their vehicles with their Business Registration Number on Fuel Pass. Fuel requirements for machinery must be registered with the respective Divisonal Secretariats with the weekly fuel requirements.