பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை! எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kanna
பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் பல அதிகாரிகள் மற்றும் துணை நிறுவனங்களின் தலைவர்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
