இன்று வியாழக்கிழமை எரிபொருளை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்..!முழுமையான விபரம் வெளியீடு
எரிபொருள் விநியோகம்
வடக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை (28/07) எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் உந்துருளிக்கு 4 லீட்டர், முச்சக்கர வண்டிக்கு 5 லீட்டர் , ஏனைய வாகனங்களுக்கு 20 லீட்டருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், கடைசி எண்கள் 3-4-5 ஆக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடைசி எண்கள் 6-7-8-9 ஆகவும் இருந்தால் திங்கள்-புதன்-வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எரிபொருள் அனுமதிப்பத்திரம் மூலம் மட்டுமே எரிபொருள் விநியோகம்

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் மட்டுமே நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாகன இறுதி இலக்கம் மற்றும் ஏனைய வழிமுறைகள் யாவும் நடைமுறையில் இருக்காது எனவும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் மட்டுமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 299 பெட்ரோலியக் கூட்டுத்தாபன மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிலையங்களில் நேற்று கியூ.ஆர் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று மொத்தமாக 92,845 வாகனங்களுக்கு கியூ.ஆர் முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி இன்று 28/07/2022 வியாழக்கிழமை எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,

