இலங்கையை வந்தடைந்த எரிபொருள் கப்பல்! இன்று எரிபொருளை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் வெளியீடு
40,000 மெட்ரிக் தொன் டீசல்
இன்று காலை (16) 40,000 மெட்ரிக் தொன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும் என்றும் பெட்ரோல் தாங்கிய கப்பல் அடுத்த வாரம் (18-19 ஆம் திகதி) நாட்டை வந்தடையுமென அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று காலை வந்தடைந்த டீசல் கப்பலின் தரம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாககவும் தெரிவித்துள்ளார்.
இன்று எரிபொருளை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்
இதே வேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீளும் வரிசைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய மென்பொருள் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று எரிபொருள் விநியோகம் செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த விசேட அறிவிப்பை லங்கா எரிபொருள் நிரப்பு நிலையம் (சிபெட்கோ) வெளியிட்டுள்ளது.