எரிபொருள் விலை குறைய வாய்ப்பு
விலை குறைப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
சராசரியாக 75. 71 டொலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 71.48 டொலராக குறைந்துள்ளது.
ஒப்பிட்டுளவில் பல்வேறு நிறுவனங்களினதும் கச்சா எண்ணெய் சுமார் இரண்டு வீதம் குறைந்துள்ளதால் உலக அளவில் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று வல்லுநர்கள் சுட்டிகாட்டி உள்ளனர்.
மீண்டும் வரிசைகள்
இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், வடக்கு மாகாணத்தின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றைய தினம் வரிசைகளை காண முடிந்துள்ளது.
எரிபொருட்களின் விலைச் சூத்திரம் இன்று(31) நள்ளிரவு முதல் மாற்றப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறு விலை குறைக்கப்பட்டால் இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், விற்பனை முகவர்கள் எரிபொருளுக்கான கொள்வனவு கோரிக்கையை விடுக்கவில்லை.
இதனால் எரிபொருளுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.