எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Transport Fares In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sathangani May 03, 2026 10:34 AM GMT
Report

புதிய இணைப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அந்த மாற்றத்தை தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தத்தில் பயன்படுத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருத்தப்பட்ட விலையை உடனடியாக கட்டணங்களில் பிரதிபலிக்கச் செய்ய முடியாது என்றாலும், தற்போதைய நிலையில் பேருந்து உரிமையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக, எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் நட்டத்தை பேருந்து உரிமையாளர்களே சுமக்க வேண்டியுள்ளது.

குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் நட்டமடைகின்றன. தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 1,500 ரூபாய் வரை நட்டத்தை எதிர்நோக்குகின்றன.

தரம் குறைந்த எரிபொருள் 

ஜூலை முதலாம் திகதி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஏனைய செலவுகளும் அதில் சேர்க்கப்படும்.

தற்போது டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரித்துள்ள போதிலும், இந்த தருணத்தில் கட்டண திருத்தத்தை கோருவதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை. எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பு பேருந்து தொழில்துறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு | Fuel Price Hike No Change In Bus Fares

எரிபொருளின் தரம் குறித்தும் பாரிய சிக்கல் நிலவுகின்றது. எரிபொருளின் தரம் குறைந்துள்ளதால், எரிபொருள் தகனம் அதிகரித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் எரிபொருள் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் கொண்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுகளில் திருப்தி இல்லாததால், எதிர்காலத்தில் சிங்கப்பூரின் உதவியுடன் தரத்தை பரிசோதிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

எரிபொருள் விலை உயர்வு

அத்துடன், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு | Fuel Price Hike No Change In Bus Fares

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகியன தமது எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில் 92 ரக பெட்ரோல்  12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் ஓட்டோ டீசலின்  விலை10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 392.00 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா IOC

எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா IOC

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்