எரிபொருள் விலை உயர்வால் இந்திய சீன நிறுவனங்களே இலாபமீட்டுகின்றன: சாணக்கியன் சாடல்
எரிபொருள் விலை அதிகரிப்பினால் சினோபெக் மற்றும் ஐஒசி ஆகிய இரு நிறுவனங்களும் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று(01) பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு காரணம் பெரும் நட்டத்தில் இயங்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனத்தின் நட்டத்தை பூர்த்தி செய்வதற்காக என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அதேவேளை, இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு எத்தனையோ முன்மொழிவுகளை கொடுத்திருந்தும் தான் ஒரு அமைச்சர் என்ற மோகத்தினால் எவருடைய கதையையும் கேட்காமல் நடந்துக் கொள்ளவதாக சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனத்தின் நட்டத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் பொதுவாக எரிபொருளின் விலையை அதிகரிப்பதால் நட்டமே இல்லாமல் இயங்கும் சினோபெக் மற்றும் ஐஒசி ஆகிய இரு நிறுவனங்களும் பாரிய இலாபத்தை ஈட்டுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |