எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அநுர வெளியிட்ட அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Sathangani Mar 20, 2026 10:21 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

உலக நாடுகள் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து முடிவெடுத்துள்ளதாகவும் ஏறத்தாழ 6 வீதம் முதல் 50 வீதம் வரை எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் எமது நாட்டில் 8 வீதம் மாத்திரமே அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை மற்றும் ஏனைய நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி இன்று (20) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து  ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “மார்ச் மாதம் 24-25 ஆம் திகதிகளில் 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று வரவிருந்தது. எமக்கு மசகு எண்ணெய் புஜைரா துறைமுகத்திலிருந்தே வருகின்றது. ஆனால் அத்துறைமுகத்திற்கு நேர்ந்த விபத்தை நீங்கள் அறிவீர்கள்.

அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுத்த அநுர

அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுத்த அநுர

மசகு எண்ணெய் கப்பல்

மேலும் வரவிருந்த 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலும் வராது. மசகு எண்ணெய் கப்பல்கள் கிடைக்காமையினால் தான் எமக்கு பிரச்சினை உருவெடுக்கலாம்.

இதற்கமைய, மார்ச் 5ஆம் திகதி நாம் ஒரு டெண்டர் கோரினோம். அது இந்த 17ஆம் திகதி திறக்கப்பட்டது. டீசல், பெட்ரோல், எண்ணெய், ஜெட் ஏ-1 மற்றும் 2 மசகு எண்ணெய் கப்பல்களுக்காக இந்த டெண்டர் கோரப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அநுர வெளியிட்ட அறிவிப்பு | Fuel Price Increase In Sri Lanka And World

அதன்படி, ஏப்ரல் 6-7 திகதிகளில் டீசல் கப்பலும், ஏப்ரல் 16-17 திகதிகளில் பெட்ரோல் கப்பலும், ஏப்ரல் 12-13 திகதிகளில் மசகு எண்ணெய் கப்பலும், ஏப்ரல் 10-11 திகதிகளில் விமானங்களுக்கான ஜெட் ஏ-1 கப்பலும் வருவதற்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலக சந்தையில் ஒரு டொலரால் எண்ணெய் விலை அதிகரித்தால், எமது நாட்டில் எண்ணெய் விலை 2 ரூபாயால் அதிகரிக்கும். இதுவே விலை சூத்திரமாகும். டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி காரணமல்ல, உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பே எமக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து முடிவெடுத்துள்ளன. ஏறத்தாழ 6 வீதம் முதல் 50 வீதம் வரை எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. எமது நாட்டில் நாம் 8 வீதம் மாத்திரமே அதிகரித்துள்ளோம், ஆனால் உலகில் 49 வீதம் வரை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

500 லீற்றர் எரிபொருடன் சிக்கிய சந்தேகநபர்!

500 லீற்றர் எரிபொருடன் சிக்கிய சந்தேகநபர்!

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 

57 வீதமான எரிபொருளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. கூட்டுத்தாபனம் மாத்திரம் இருந்திருந்தால், ஒரு நேரத்தில் நட்டமடைந்து மறுநேரம் இலாபம் ஈட்டி இதனை முகாமைத்துவம் செய்திருக்கலாம்.

ஆனால் 43 வீதம் தனியார் துறையிடம் உள்ளது. தற்போதைய சந்தை விலையை வழங்காவிட்டால் எரிபொருளை இறக்குமதி செய்யப் போவதில்லை என அவர்கள் கூறுகின்றனர். அது நியாயமானது.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அநுர வெளியிட்ட அறிவிப்பு | Fuel Price Increase In Sri Lanka And World

அவர்களின் கணக்கீட்டின்படி, ஒரு கப்பல் மூலம் அவர்களுக்கு 55 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுகிறது. இவ்வளவு பெரிய நட்டத்தில் யாரும் எண்ணெயைக் கொண்டு வரமாட்டார்கள்.

எனவே, எரிபொருள் விநியோகத்தில் தனியார் துறையின் பங்களிப்பு அவசியமானது. ஆனால் அவர்களின் செலவுக்கு ஏற்ப விற்பனை செய்ய முடிந்தால் மாத்திரமே அவர்கள் பங்களிப்பார்கள். எனவே எரிபொருள் விலை குறித்து நாம் மிக விரைவில் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதுள்ள சட்டத்தின்படி நிறுவனங்களுக்கு விலையை அதிகரிக்க அனுமதி உண்டு. இருப்பினும், சட்டத்தின்படி உச்ச விலையை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே தீர்மானிக்கிறது.

நாம் இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும், சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யவில்லை. எரிபொருள் மூலம் எமக்குக் கிடைக்கும் வரி வருமானம் 20 பில்லியனாகும். கடந்த ஆண்டு டீசல் மீதான வரியூடாக எமக்கு 240 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி