அதிரடி மாற்றம் கண்ட எரிபொருள் விலை...! வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
தற்காலிக பதவிகளை வைத்துக்கொண்டு கட்சிக்கு சேறுபூசும் நடவடிக்கை : முன்னாள் எம்பி சிவமோகன் குற்றச்சாட்டு!
விலை திருத்தம்
அத்தோடு, 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 279 ரூபாவாகும்.
இதேவேளை, 318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 323 ரூபாவாகும்.

இதனுடன், மண்ணெண்ணெய் இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது 294 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |