முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Economy of Sri Lanka
Fuel Price In World
By Dharu
கொழும்பு மாவட்டத்தில், முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு மற்றும் வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிப்பு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில், நாளை முதல் முச்சக்கர வண்டிகளில், 2ஆம் கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
100 ரூபா கட்டணம்
எனினும், முதலாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தில் மாற்றமில்லை என அகில
இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
