மீண்டும் எகிறிய எரிபொருள் விலை...! விளக்கம் கூறும் அரச தரப்பு
எரிபொருள் விலையில் ஜுன் மாதம் தொடக்கத்திலும் ஜுன் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பே எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏதுவானது என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜுன் மாதத்தில் ஏற்பட்ட விலை தளம்பலுக்கேற்பவே ஜுன் 30 திகதி விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது
அவ்வாறான நடைமுறையே பின்னபற்றப்படுகிறது. மாதத்தின் தொடக்கத்தில் விலை குறைவடைந்தால் அதன் பலனை மாத இறுதியில் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறே விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அரசாங்கத்தில் இறக்குமதியின் போது ஏற்படுத்தப்பட்ட மோசடி இன்றும் எம்மை பின் தொடந்து வருகிறது.
அவர்கள் சென்றாலும் அவர்களால் எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் ஏற்படுத்தப்பட்ட நட்டத்தை நாம் சரி செய்யும் போது இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
