நாட்டின் எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
Economy of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Shadhu Shanker
நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை எக்ஸ் (டுவிட்டர்) செய்தியொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருளின் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
எரிபொருளின் பாவனை
இலங்கையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் கடந்த பருவத்தில் விற்பனை செய்த எரிபொருள் அளவு தொடர்பான தரவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
மரண அறிவித்தல்