நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
Srilanka
increase
Fuel prices
Lanka IOC
today midnight
By MKkamshan
இன்று (06) நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
