மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை - சினோபெக் நிறுவனத்தின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் காரணமாகஇ உலகளாவிய எரிபொருள் சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.
சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அறிவித்துள்ளது. அத்துடன் தற்போதும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலை 600 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெற்றோலின் விலை
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களினதும் விலைகளை அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

அதன்படி: 410 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 24 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 434 ரூபாய் ஆகும்.
அதேபோல், 470 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 495 ரூபாய் ஆகும்.
இதேவேளை, ஒரு லீற்றர் 265 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபாய் ஆகும் என லங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |