வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு : வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Sathangani Mar 15, 2026 11:05 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக நடைமுறையை முறைப்படுத்துவதற்காக, வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கிய படிநிலைகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, வாகன உரிமையாளர்கள் தாங்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகிறார்கள் என்பதை அடையாளம் கண்டு, அதற்கேற்ப QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எரிபொருள் நிலையங்களில் நெரிசல்

ஏற்கனவே QR குறியீடு வைத்திருப்பவர்கள் மற்றும் வாகன உரிமையிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திலோ எவ்வித மாற்றமும் இல்லாதவர்கள், தங்களின் பழைய QR குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்தி தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு : வெளியான அறிவிப்பு | Fuel Qr System Implemented In Sri Lanka From Today

முன்னர் பதிவு செய்து, ஆனால் தற்போது QR குறியீட்டைத் தொலைத்தவர்கள் அல்லது தொலைபேசியிலிருந்து நீக்கியவர்கள் தகவல்கள் மாறாத பட்சத்தில் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. கணினியில் உள்நுழைந்து, தொலைபேசிக்கு வரும் கடவுச்சொல் மூலம் பழைய QR குறியீட்டை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள், புதிதாக வாகனம் வாங்கியவர்கள் (உரிமை மாற்றம்) அல்லது முன்னர் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தைப் தற்போது பயன்படுத்தாதவர்கள் ஆகியோர் கணினியில் புதிதாகப் பதிவு செய்தல் அவசியமாகும்.

எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் குறைக்கவும், வினைத்திறனான சேவையை உறுதிப்படுத்தவும் இந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்கள் அல்லது இது தொடர்பான சிக்கல்களுக்கு, அரச தகவல் மையத்தின் 1919 என்ற விசேட இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னர் QR குறியீட்டைப் பெற்று, தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் எவ்விதத் தடையுமின்றி தமது புதிய QR குறியீட்டை இணையதளத்தின் ஊடாக உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் அல்லது தொலைபேசி இலக்கங்கள் மாறியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று முதல் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை

இன்று முதல் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை

எரிபொருள் விநியோகம்

இவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான விசேட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு : வெளியான அறிவிப்பு | Fuel Qr System Implemented In Sri Lanka From Today

அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் விசேட தேவைகள் குறித்து இன்று (15) பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கான இறுதித் தீர்மானங்கள் இன்றைய தினத்திற்குள்ளேயே வழங்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உத்தியோகபூர்வ தகவல்களுக்கு https://fuelpass.gov.lk இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கான அனுமதியை மறுத்த சுவிட்சர்லாந்து

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கான அனுமதியை மறுத்த சுவிட்சர்லாந்து

நாட்டில் அதிகரித்துள்ள தாதியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

நாட்டில் அதிகரித்துள்ள தாதியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023