பெருமளவு பெட்ரோலை மறைத்து வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் சிக்கியது
பேருவளையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையம் நேற்று இரவு (ஜனவரி 14) களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது, அதில் வாடிக்கையாளர்களுக்கு 92 ஒக்டேன் பெட்ரோல் கிடைக்கவில்லை என்று கூறி கிட்டத்தட்ட 6,400 லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள சில எரிபொருள் நிலையங்கள் இரவு நேரங்களில் 92 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்பில் இல்லை என்று பொய்யாகக் கூறி, அதிக விலைக்கு யூரோ 3 பெட்ரோலை விற்பனை செய்வதன் மூலம் வாகன உரிமையாளர்களை சிரமப்படுத்துவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரபூர்வமாக சீல் வைக்கப்பட்டது
சோதனையின் போது, சம்பந்தப்பட்ட எரிபொருள் விநியோக நிறுவனத்தின் அதிகாரிகள் 92 ஒக்டேன் பெட்ரோல் கிடைக்கவில்லை என்று கூறி, இரவில் யூரோ 3 பெட்ரோலை விற்பனை செய்யுமாறு ஓழியர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரியவந்தது.

சோதனையின் போது நிலைய நிர்வாகம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட எரிபொருள் இருப்பு அதிகாரபூர்வமாக காவலில் எடுத்து சீல் வைக்கப்பட்டுள்ளது,
அதே நேரத்தில் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. சந்தேக நபர்களுக்கு எதிராக நாளை(16) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |