எரிபொருளுக்கான மானியம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Anura Kumara Dissanayaka
National Fuel Pass
By Jaso
அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பகாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம்
இந்த நிவாரணத் தொகுதிக்காக 4,100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கமைய, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்காக இந்த எரிபொருள் மானியம் கிடைக்கப்பெறும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |