யாழில் எரிபொருள் விநியோகம் - அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

By Jaso Jul 21, 2022 04:19 PM GMT
Report

பொதுமக்கள் பலரும் எரிபொருள் பங்கீட்டு அட்டை முறைமையின் நன்மைகளை வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இந்த திட்டத்தை குழப்புவதற்கு முனைவதையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஆகவே அனைவரும் ஒத்துழைத்து இந்த முறைமை மூலம் சீரான எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவட்ட செயலர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெட்ரோல் விநியோகம்

பெட்ரோல் விநியோகத்தைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக இன்று முதல் 29ஆம் திகதி வரை நாளாந்தம் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. மக்கள் எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தாது அமைதியாக இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.

 டீசலை பொறுத்தவரை 8 தொடக்கம் 10 வரையான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 25ஆம் திகதி வரை தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதற்குரிய அட்டவணை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது .

குழப்பமான நிலை உருவாகும் சூழல்

இன்று எரிபொருள் விநியோகம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் பொதுமக்கள் ஒன்று கூடி நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் அதேபோன்று எரிபொருள் பெறுவதற்குரிய விதிமுறை மற்றும் அறிவுறுத்தலை பின்பற்றாமலும் இருப்பதால்  குழப்பமான நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டிருக்கின்றன.

ஆகவே எரிபொருளை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திர முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக 25ஆம் திகதிக்கு பின்னதாக கட்டாயமாக நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

யாழ். மாவட்டத்திற்கான விசேட ஏற்பாடு

ஆனால் அந்த முறைமை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே பிரதேச செயலாளர்களால் வழங்கியுள்ள எரிபொருள் விநியோக அட்டைகளை பயன்படுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். இது யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விசேட ஏற்பாடு இதை தேசிய முறைமையுடன் இணைந்த வகையில் கொண்டு செல்ல முடியும்.

நெருக்கடியை குறைப்பதற்கு அனைவருக்கும் முறையாக இந்த பங்கீட்டு அட்டை முறையை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்.  எரிபொருள் விநியோக அட்டைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றோம்.

முன் அனுமதி அவசியம்

யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தை மிக மிக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் விநியோகிக்க ஒதுக்கி இருக்கின்றோம். அதில் எரிபொருளை நிரப்ப மாவட்ட செயலகத்தின் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

பொதுமக்கள் பலரும் இந்த திட்டத்தினாலான நன்மைகளை வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இந்த திட்டத்தை குழப்புவதற்கு முனைவதையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஆகவே அனைவரும் ஒத்துழைத்து இந்த முறைமை மூலம் சீரான விநியோகத்தை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார். 

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016