அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு பிரத்தியேகமாக எரிபொருள் வைத்திருக்குமாறு பணிப்பு
srilanka
fuel
crisis
fuel shortage
essential need vehicles
By Kanna
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு பிரத்தியேகமாக எரிபொருளை வைத்திருக்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் முன்னறிவிப்பின் பின்னர் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமாறும், பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் இணைந்து இச் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இதேவேளை, சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த கப்பலில் இருந்து மேலும் 20,000 மெற்றிக் டொன் டீசல் இறக்கப்பட்டுள்ளது.
30,000 மெற்றிக் டொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி