கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படும் முக்கிய நிறுவனங்கள் - கஞ்சன அதிரடி அறிவிப்பு
மின்சார சபை மற்றும் சிபெட்கோ(CEYPETCO) எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது குறித்த அறிவித்தலை எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளருக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு 03 வருடங்களுக்கும் 25% ஊதியத்தை அதிகரிக்கும் வருடாந்திர மேலதிக கொடுப்பனவு மற்றும் பிற கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
டுவிட்டர்

மேலும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Collective agreements entered with Trade unions of CEB & CPC for 25% salary increment every 3 years, annual bonuses, allowances & other benefits will not be continued or renewed. I have instructed Secretary to the Min of Power & Energy to commence the process to terminate them.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 10, 2023