ரணிலுக்கு வருகிறது மற்றுமொரு பேரிடி! தொடரும் விசாரணைகள்
2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து முழுமையான விசாரணையைத் தொடங்க அரசாங்கத்தின் சட்டத் துறை செயல்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிய அளவிலான மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்ட எவரையும் தப்பிக்க விடக்கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கையின்படி இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க காலத்தில் மிக நுணுக்கமாக மறைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டத் துறை தற்போது அந்த ஆதாரங்களை விசாரித்து வருவதாகவும் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அர்ஜுன மகேந்திரன்
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி என்பது 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பெரிய அளவிலான நிதி மோசடியாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தலைமையிலான காலத்தில் நடந்தது.
குறித்த பிணைமுறி வெளியீட்டில் Perpetual Treasuries Limited (PTL) என்ற தனியார் நிறுவனம் அநியாயமான லாபத்தை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.
ரணில் மீதான குற்றச்சாட்டு
அதன்போது, மகேந்திரன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு பெரிய நஷ்டமும் PTL நிறுவனத்துக்கு பாரிய லாபமும் கிடைக்க ஏற்படுத்தியதாக விசாரணைகள் வெளிப்படுத்தியிருந்தன.
அதன்படி, அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க மகேந்திரனை ஆளுநராக நியமித்தது, ஆரம்பத்திலேயே அவரை பாதுகாத்தது காரணமாக அதன் பிரதாக சூத்திரதாரியாக ரணில் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
