மீள் பிரவேசத்திற்கான அறிகுறியா - கோட்டாபய மற்றும் பீரிஸ் இரகசிய சந்திப்பு!
G. L. Peiris
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lankan political crisis
By Kalaimathy
சுதந்திர தேசிய சபையில் தலைமை பொறுப்பை வகிக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இருவரும் சுமார் இரண்டு மணி நேரமாக விரிவாக அரசியல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டுக்கு சென்று ஜீ.எல்.பீரிஸ் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதுடன் இதன் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
இதனிடையே சுதந்திர தேசிய சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் முன்னாள் அதிபரை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி