மட்டக்களப்பு செங்கலடி சந்தையில் நள்ளிரவு பாரிய திருட்டு
மட்டக்களப்பில் (Batticaloa) நள்ளிரவில் கடைகள் உடைக்கப்பட்டு பணம் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (20) செங்கலடி பொதுச் சந்தையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செங்கலடி பொதுச் சந்தைக்குள் நுழைந்த திருடர்கள் மூன்று பேர் கடைகளை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
நபர்களின் நடமாட்டம்
திருட்டில் ஈடுபடும் திருடன் ஒருவனின் சிசிரிவி காட்சிகள் வியாபார நிலையங்களில் உள்ள சிசிரிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இரவு சுமார் 11.40 மணியளவில் இரும்பு அளவாங்கால் அடித்து மூன்று கடைகள் உடைக்கப்படும் போது பிரதேச சபையினால் நியமிக்கப்பட்ட இரண்டு காவலாளிகளும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.
செங்கலடி சந்தைப் பகுதி மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருந்த நிலையில் இவ்வாறான திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனால், செங்கலடி சந்தை பகுதியில் உள்ள வியாபார நிலையங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



