சீனாவின் அச்சுறுத்தல் - ரஷ்ய பொருளாதாரதிற்கு ஜீ7ஆல் புதிய சிக்கல்!
ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே ஹிரோஷிமாவில் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி 7 உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.
ஜி7 உச்சி மாநாட்டை மே 19 முதல் 21 வரை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் தலைமையில் ஹிரோஷிமாவில் நடைபெறவுள்ளது.
ஹிரோஷிமாவில் அமைந்துள்ள அமைதி நினைவுப் பூங்காவில் 1945 இல் அமெரிக்கா அணுகுண்டு வீசியதில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மலர்வளையம் வைத்து அங்கு வருகை தந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை கிஷிடா வரவேற்றதன் மூலம் நிகழ்வு ஆரம்பமானது.
ரஷ்யாவின் படையெடுப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் போர் விவகாரம் என்பவற்றிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து நண்பகலில் விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டன .
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் குறித்த கூட்டத்தில் வார இறுதியில் தலைவர்களுடன் காணொளி மூலம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். உலகிலேயே முதன்முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான இடம் என்பதால் அணு ஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிபாட்டை வலியுறுத்துவதற்கு சிறந்த இடமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல்
அந்த வகையில் இன்று ஆரம்பமாகும் மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஓலா ஸ்கால்ஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தனி விமானங்கள் மூலம் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா, அவுஸ்ஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹிரோஷிமாவில் மோடி காந்தி சிலையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது.
குறித்த மாநாட்டில் சர்வதேச அரசியல், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார மற்றும் பருவநிலை சார்ந்த பிரச்சினைகள் பற்றி சர்வதேச தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இது தவிர உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்யாவுக்கு கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பது, சீனாவின் அச்சுறுத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
