சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வரும் காலம்: கடும் தொனியில் சாடும் கஜேந்திர குமார்
முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் (M. A. Sumanthiran) அரசியல் முடிவுக்கு வருகின்ற காலம் இதுவெனவும், இதனால் அவர் அமைதியான முறையில் அரசியலைவிட்டு விலகுவது சிறந்தது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார மேடைகளில் எனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் உங்களது தேர்தல் பரப்புரைகளைச் செய்யுங்கள் என சுமந்திரன் சவால் விடுத்த நிலையிலேயே, யாழ் - வடமராட்சி (Vadamarachchi) ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற (07.11.2024) ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ நான் உண்மையிலேயே சுமந்திரனின் பெயரை வலியுறுத்தி பேசுவதை நீண்ட காலமாக தவிர்த்து வருகிறேன்.
ஏன் என்றால் என்னை பொறுத்தவரை அவருடைய அரசியல் காலம் முடிவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது.
ஆகவே அவர் அமைதியான முறையில் அரசியலை விட்டு விலகுவது தான் பொருத்தம். ஆனால் அவர் அப்பட்டமான பொய்களை சொல்லும் பட்சத்தில் ஊடகங்கள் அது தொடர்பில் எம்மிடம் கேட்கும் போது அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.
இதனால் தான் சுமந்திரன் என்கின்ற தனி நபரை பற்றி பேச வேண்டியுள்ளதாகவும், எம்.ஏ.சுமந்திரனின் 15வருட கால அரசியல் மிக மோசமானதாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் தேசிய அரசியலுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திர குமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
மேலதிக விரிவான செய்திகளுக்கு ஐபிசி தமிழின் பிரதான செய்திகள் (07.11.2024)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |