சிறீதரன் எம்.பியை பற்றி வாய்திறக்க கஷ்டப்படும் கஜேந்திரகுமார்... சம்பந்தன் ஏற்றதையும் சுமந்திரன் குழப்பியதாக புது தகவல்
ஏக்கிய ராஜ்ய (ஒற்றையாட்சி) அரசியலமைப்புக்கு தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்தார்.
தமிழ் மக்களிடம் பெற்ற ஆணை சமஸ்டிக்கானது. ஆகவே ஏக்கிய ராஜ்ய (ஒற்றையாட்சி) அடிப்படையிலான எந்த தீர்வு திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாது தமிழரசுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) அந்தவிடயத்தில் முழுமையான எதிர்ப்பை வெளியிட்டார் என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) ஏக்கிய ராஜ்ய (ஒற்றையாட்சி) அரசியலமைப்புக்கு எதிரானவரா என்ற கேள்விக்கு நேரடியான பதிலளிப்பில் இருந்து கஜேந்திரகுமார் விலகியமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |