முழுமையான சமஷ்டி தீர்வு வேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து
ஒற்றையாட்சி என்ற அரசியலமைப்பை முற்று முழுதாக நிராகரித்து முழுமையான சமஷ்டி தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,“ சமஷ்டி தீர்வை நோக்கி நகர்வதற்காகவே மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் வலியுறுத்தியிருந்தோம்.
அத்துடன், கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
