ஞானசாரர் விவகாரத்தில் புத்தசாசன அமைச்சுக்கு முன் முரண்பட்டுக்கொண்ட தேரர்கள்
ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து மகாசங்க தேரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று நிறைவுற்றது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துச் சென்ற பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கும் மற்றொரு தேரருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேரர் ஒருவர் திடீரென கஸ்ஸப்ப தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாய்ப்புகளை தவறவிட்டீர்கள்
“அதில் நீங்கள் செய்தது எல்லாம் போதும். நான் கூறுவதைக் கேளுங்கள். இரண்டு வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டையும் தவறவிட்டீர்கள்” என கஸ்ஸப்ப தேரரை நோக்கி மற்றுமொரு தேரர் கூறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

பின்னர் புத்தர் சிலையுடன் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்துக்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தேரர்களுக்கிடையில் சிறு சிறு முரண்பாடுகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டதை தொடர்ச்சியாக காணக்கூடியதாக இருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |